Breaking News

தமிழக அரசின் கலப்புத் திருமண நிதியுதவி திட்டம் விண்ணப்பிப்பது எப்படி?

அட்மின் மீடியா
0

தமிழக அரசின் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவி திட்டம் 



கலப்புத் திருமணங்கங்களுக்கான நிதி உதவி திட்டம் 1 


25,000 ரூபாய் 

15,000 ரூபாய் காசோலையாகவும், 

10,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்

மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும். 


கலப்புத் திருமணங்கங்களுக்கான நிதி உதவி திட்டம் 1 

50,000 ரூபாய்

30,000 ரூபாய் காசோலையாகவும், 2

0,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்

மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.


தகுதிகள் 

தம்பதியரில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருந்து, பிற இனத்தவரை மணந்துகொண்டால் நிதியுதவி வழங்கப்படும். 

அல்லது

புதுமணத் தம்பதியரில் ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருந்தால் நிதியுதவி வழங்கப்படும். 


கல்வி தகுதி: 


திட்டம் 1 க்கு கல்வித் தகுதி தேவை இல்லை. 


திட்டம் 2க்கு பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


தேவையான சான்றுகள் 


திருமணப் பத்திரிகை அல்லது திருமணப் பதிவுச் சான்று 

மணமகன் மற்றும்  மணமகளின் ஜாதிச் சான்று 

மணமகன் மற்றும்  மணமகளின்  வயதுச் சான்று 

கல்லூரி தேர்ச்சி சான்று 

ஆதார் கார்டு 

பேங்க் பாஸ் புக் நகல் 


விண்ணப்பிக்க கால அளவு


திருமணம் முடிந்து இரண்டு வருடங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

எங்கு விண்ணப்பிக்க வேண்டும்

மாநகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சி ஆணையர் அலுவலகம் 

நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி ஆணையர் அலுவலகம்  

ஊரகப் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அலுவலகம் .

கிராப்புற பகுதிகளில் வசிப்பவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் 

தவிர மாவட்ட சமூகநல அலுவலர்களை அணுகலாம்


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback