Breaking News

பிப்.8 முதல் கல்லூரி வகுப்புகள் தொடங்க அனுமதி - தமிழக அரசு

அட்மின் மீடியா
0

கொரோனா ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் வரும் பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி முதல் கல்லூரி வகுப்புகளை தொடங்க தமிழக அரசு அனுமதியும்  வழங்கியுள்ளது. 



 அதன்படி, இளநிலை, முதுநிலை படிக்கும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வரும் பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி முதல் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இதுபோன்று பிப்.8 முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகள் நேரம் கட்டுப்பாடு இன்றி இயங்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீச்சல் குளங்கள் இயங்கலாம். தமிழகத்தில் உள்ள திரையரங்குகளளில் 100% இருக்கைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback