Breaking News

8ம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

அட்மின் மீடியா
0

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு NMMS தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த 8ம் தேதியுடன் நிறைவடைந்தது. மாணவர்களின் விவரங்களை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கடந்த 12ம் தேதி அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் பதிவேற்ற தேர்வுத் துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது என்எம்எம்எஸ் தேர்வு விண்ணப்பங்களை வரும் 20ம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும் என்று அறிவிக்க்ப்பட்டுள்ளது.

 


இந்த NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையோர்:மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் (அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்) 2020- 2021ஆம் கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்

 

விண்ணப்பிக்கும் முறை:

NMMS தேர்விற்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய தேர்வர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கமுடியும் 

 

தேர்வு நடைபெறும் நாள்:

 21.02.2021

 

விண்ணப்பம் டவுன்லோடு செய்ய:

 

https://tnegadge.s3.amazonaws.com/notification/NTS/1605879117.pdf

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் மாணவர்கள் தாம் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50/- உடன் அளிக்கவேண்டும் 

பள்ளித் தலைமையாசிரியர்கள் அருகிலுள்ள வட்டார வள மையங்களின் (BRC) உதவியுடன் இணையதள வசதி கொண்ட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தங்கள் பள்ளி மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகப் பதிவு செய்தல் வேண்டும்.

அரசு பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின்  இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு 9- ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாதம் ரூபாய் 500 வீதம் ஆண்டு ஒன்றுக்கு உதவித் தொகையாக ரூ. 6,000 வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு: 

https://tnegadge.s3.amazonaws.com/notification/NTS/1605879117.pdf

 

https://tnegadge.s3.amazonaws.com/notification/NTS/1605879192.pdf 

 

https://apply1.tndge.org/dge-notification/NTS

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback