தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் இந்திய வானிலை ஆய்வு மையம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இரவு, பகல் பாராமல் பெய்து வரும் மழையினால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற 11 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்