Breaking News

ரஷ்யாவில் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த காண்டாமிருகம் உடல் கண்டெடுப்பு! வீடியோ

அட்மின் மீடியா
0

சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த woolly rhino-ன் உடல் காண்டா மிருக உடல் கண்டு எடுக்கப்பட்டுள்ளது



ரஷ்யாவின் கிழக்கு சைபீரியாவில் உள்ள நிரந்தர உறைந்த பனிபரப்பு உருகியது அதில் ஒரு மிருகத்தின் உடல் தெரியவே அதனை  உள்ளூர் மக்கள் புதைந்து கிடந்த அந்த விலங்கின் உடலை மீட்டனர். 


அதன் பின்பு ஆராய்ச்சியாளர்கள் இந்த விலங்கின் உடலை மீட்டு ஆய்வு செய்தபோது சுமார் 20,000 முதல் 50,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம் என்றும், ஒருவகை காண்டாமிருகத்தின் உடல் என்பதையும் கண்டறிந்தனர்.

இந்த காண்டா மிருகத்திற்க்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கலாம் எனவும் இது  நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

மேலும் உடல் நிரந்தர பனிபரப்பில் புதைந்து இருந்ததால், இத்தனை ஆண்டுகளாக சிதையாமல் இருந்துள்ளது என ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்

https://www.youtube.com/watch?v=iwT3wZwlzo0




Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback