Breaking News

5 Kg சிலிண்டர் வாங்க முகவரி சான்று தேவையில்லை, முன்பதிவும் தேவையில்லை இல்லை, சிலிண்டர் தீர்ந்து போனால் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வாங்கிகொள்ளலாம். விண்ணப்பிப்பது எப்படி!!!

அட்மின் மீடியா
0

பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்யும் 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது




வீடுகள் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கு என்று முறையே 14.20 கிலோ, 19 கிலோ என, இரண்டு வகை சமையல் காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன.

அத்துடன், விடுதி மாணவர்கள், இடம் பெயர்ந்தோர் வசதிக்காக, கடந்த 2013-ம் ஆண்டு சென்னை, டில்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூருவில், 5 கிலோ காஸ் சிலிண்டர் விற்பனைத் திட்டத்தை ஆயில் நிறுவனங்கள் தொடங்கியது. 

இந்த 5 Kg சிலிண்டர்  சிறப்பம்சங்கள்

  • இந்த 5 கிலோ குட்டி எரிவாயு சிலிண்டரை  முகவரி ஆதாரம் ஏதும் இல்லாமல் வாங்கலாம். 


  • இந்த குட்டி எரிவாயு சிலிண்டரை வாங்க அடையாள அட்டையே போதும். 


  • உங்கள் அருகில் உள்ள கேஸ் விநியோகஸ்தர்களிடமிருந்து குட்டி சிலிண்டரான 5 கிலோ சிறிய எரிவாயு சிலிண்டரை வாங்கலாம். 


  • குறைந்த விலை காரணமாக பொருளாதார ரீதியாக பிந்தங்கியுள்ள மக்களின் பட்ஜெட்டில் இது எளிதில் பொருந்துகிறது. 


  • இந்த சிலிண்டர்களுக்கு முன்பதிவு தேவையில்லை எப்போது வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம்


  • சிறியதாக அடக்கமாக உள்ளதால் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்


  • ஏற்கனவே, வாங்கிய சிலிண்டர் தீர்ந்து போனால் நீங்கள் இந்தியாவில்  எங்கு வேண்டுமானாலும் மாற்று சிலிண்டர் வாங்கி கொள்ளலாம் 

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback