தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
குமரிக்கடலை ஒட்டி காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியிருப்பதால் தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு 4 மாவட்டங்களில் கனமழையும் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ,கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்,பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், திருனெல்வேலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி தேனி ஆகிய 4 மாவட்டங்களில் கன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
