Breaking News

சிறையில் இருந்து வரும் 27-ல் சசிகலா விடுதலை- மருத்துவமனை டிஸ்சார்ஜ் தேதி பின் அறிவிப்பு: தினகரன் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 பெங்களூரு சிறையில் இருந்து வரும் 27-ந் தேதி சசிகலா விடுதலையாவது உறுதி என்ன அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 



மேலும் மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் ஆகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தினகரன் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் சசிகலாவிற்க்கு  கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. இதனிடையே சசிகலா விடுதலை தொடர்பாக டிடிவி தினகரன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:


நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார்.

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு டிடிவி தினகரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback