Breaking News

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அரசு அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

தமிழகத்தில் கொரானா ஊரடங்கால்  தியேட்டர்கள்மூடப்பட்டு உள்ளன மேலும் கொரோனா பரவல் குறைய குறைய தளர்வுகளின் அடிப்படையில் கடந்த அக்டோபர்மாதம் முதல் 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. 

இந்நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி கடந்த 4 ம்தேதி உத்தரவிட்டது

இந்நிலையில் தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில் "திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருப்பது விதிமீறல், திரையரங்குகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்ப்பெற வேண்டும். திரையரங்குகளில் 50 சதவீதம் வரை பார்வையாளர்களுக்கு அனுமதி என்ற உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலை தமிழ்நாடு அரசு பின்பற்ற வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback