Breaking News

இனி காருக்கு 10 நிமிடம் சார்ஜ் 400 கிலோமீட்டர் பயணம் சூப்பர் பேட்டரி கண்டுபிடிப்பு

அட்மின் மீடியா
0

வெறும் 10 நிமிட ரீசார்ஜிங்கில் 400 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனம் ஓடுவதற்கான சக்திகொண்ட சூப்பர் பேட்டரி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.


பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் கடந்து காற்றை மாசுபடுத்தாத பேட்டரி சார்ஜ் மூலம் இயங்கும் வாகனங்கள் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுப் பயன்பாட்டில் இருந்து வருகிறது.



அமெரிக்காவின் பென் மாகாண பல்கலை கழக பொறியாளர்கள் வடிவமைத்துள்ள புதிய லிதியம் அயன் பாஸ்பேட் பேட்டரி முழு சார்ஜ் ஆக 10 நிமிடங்கள் போதுமானது. 

மிக மிக எடை குறைந்த இந்த பேட்டரியில் ஒருமுறை சார்ஜ் செய்தால், 400 கிலோ மீட்டர் வரை வாகனம் பயணிக்கும். செலவு குறைந்த இந்த பேட்டரியின் ஆயுள் காலம், குறைந்தது 2 லட்சம் மைல்கள்.

இந்த பேட்டரி விரைவில் சந்தைக்கு வருமென பென் பல்கலை கழக பொறியாளர்கள் அறிவித்துள்ளனர். 

Source:

https://www.dailymail.co.uk/sciencetech/article-9159913/Electric-car-battery-charge-10-minutes-250-miles-combats-range-anxiety.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback