Breaking News

FactCheck: 2500 உடன் 1500 கூட்டினால் ரூ.5000 என்று மு.க.ஸ்டாலின் பேசினாரா?உண்மை என்ன!!!

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  5000த்தில் இருந்து 2500 போனால் 1500 சுடலை ராக்ஸ் #தினம்_ஒரு_உளறல் என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 





அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிராமசபை கூட்டத்தில் மக்கள் முன்பாக பேசும் போது, அதிமுக அரசு ரேசன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு 2,500 ரூபாய் வழங்குவதாக பேசுகிறார். அப்பொழுது, 2,500 என பேசிய பிறகு 5000-க்கு இன்னும் 1,500 ரூபாய் இருப்பதாக கணக்கு கூறும் 19 நொடிகள் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது...

அந்த வீடியோவை சற்று உற்று கவனத்தாலே தெரியும் அது எடிட் செய்யப்பட்ட வீடியோ என்று

கடந்த 29 ம் தேதி ராணிப்பேட்டை அனந்தலை பகுதியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்

அதிமுக அரசை கொரோனா ஊரடங்கு நிவாரணத் தொகையாக மக்களுக்கு ரூ.5000 வழங்க கேட்டுக் கொண்டிருந்தேன். அதனை தராமல், ஏற்கனவே ஒரு ரூ.1000 மட்டும் வழங்கினார்கள். .

தற்போது பொங்கல் பரிசாக, ரூ.2500 வழங்குவதாக, அறிவித்துள்ளனர். இதனுடன் மேலும் ரூ.1500 சேர்த்து வழங்கினால், ரூ.5000 என்ற நான் சொன்ன கொரோனா நிவாரணத் தொகை வந்துவிடும். அந்த கணக்கை அதிமுக அரசு பூர்த்தி செய்ய வேண்டும்,’’ என்று பேசியுள்ளார். 

அவரது பேச்சில் சில பகுதிகளை கட் செய்து எடிட் செய்து ரூ.2500 மற்றும் ரூ.1500 சேர்த்தால், ரூ.5000 வரும் என்று மு.க.ஸ்டாலின் பேசியதாகக் கூறி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகிறார்கள்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவின் எடிட் செய்யப்படாத முழு வீடியோ  கீழே உள்ள லின்ங்கில் உள்ளது

அதில் 31 வது நிமிடத்தில் அந்த எடிட் செய்யப்பட்ட வீடியோ வரும் நீங்களே பாருங்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்



அட்மின் மீடியாவின் ஆதாரம்


 https://www.youtube.com/watch?v=6qk9je-Mtls


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Share this