Breaking News

FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர் வேடத்தில் இஸ்லாமியர் என பரவும் செய்தியின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

 

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் விவசாய போராட்டத்தில் மீசை இல்லாத சிங். எங்காவது முறுக்கிய மீசை இல்லாத சிங்கை பார்த்திருக்கீங்களா? விவசாயிகள் போராட்டத்திற்கு, விவசாயிகளை விட, எதிர் கட்சிகளை விட, மொத்த கொள்முதல் ஏஜன்ட்களை விட, கிருத்துவர்களும் முஸ்லிம்களே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்” என்று 
என்று  ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 





அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த நபர் முஸ்லீம் கிடையாது அவர் ஒரு சீக்கியர்

பலரும் ஷேர் செய்யும் அந்த புகைபடத்தில் உள்ளது போல் அவருக்கு மீசை இல்லாமல் இல்லை அவருக்கு மீசை உள்ளது





யாரோ சிலர் வேண்டும் என்றே அந்த புகைபடத்தை எடிட் செய்து தவறாக பரப்பி விடுகின்றார்கள்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback