Breaking News

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு CLICK HERE PRESS NEWS & DATE

அட்மின் மீடியா
0
வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டித்து மத்தியஅரசு உத்தரவு
வருமான வரிச்சட்டம் பிரிவு 139ன் படி, 2019-20 கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான  வரிக்கணக்கை, 2020 மார்ச் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, இதற்கான அவகாசம் முதலில் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர், ஜூலை 31, செப்டம்பர் 30, நவம்பர் 30ம்  தேதி, அதன் பிறகு டிசம்பர் 31 வரையிலும் நீட்டிக்கப்பட்டது.


இந்த நிலையில் வருமான வரி தாக்கல் செய்ய நாளை தான் கடைசி தினம் என்பதால் பொதுமக்கள் வருமான வரியை தாக்கல் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். 

இந்த நிலையில் தற்போது வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது 2020-21க்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் பிப்ரவரி 15 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது 

மத்திய நிதி அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு காரணமாக இன்னும் இரண்டு மாதங்கள் கால அவகாசம் உள்ளது என்பதால் வருமான வரி செலுத்தும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback