Breaking News

#BREAKING: அடுத்தவாரம் முதல் 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை - மத்திய அரசு..!

அட்மின் மீடியா
0

அடுத்தவாரம் முதல்  கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது

 


இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான திட்டங்கள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மாநில அரசுகளுடன் இணைந்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக 20 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், அடுத்தவாரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எப்படி கொரோனா தடுப்பூசி எடுத்து செல்லப்படும்..? எப்படி பதப்படுத்தி வைக்கப்படும் அதன் பிறகு எந்த தேதியில், எந்த நேரத்தில் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். தடுப்பூசி சரியான முறையில் நடக்க வேண்டும்.இதில் எந்தவித குழப்பமும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஆந்திரா, அசாம், குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளுக்கான முன்னோட்ட நடவடிக்கை நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

source:

https://www.timesnownews.com/india/article/centre-gears-up-for-roll-out-of-covid-19-vaccine-dry-run-for-vaccine-administration-in-4-states-next-week/698899

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback