Breaking News

#BREAKING : தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வு ! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பள்ளி நிர்வாகம் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 



கொரோனா காரணமாக பள்ளிகள் மார்ச் மாதம் மூடப்பட்டன. இதுவரையில் திறக்கப்படவில்லை. இதனிடையே, மாணவர்களின் எதிர்கால நலன் கருதி பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகின்றன. 

அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக வீடியோ பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது, தமிழகத்தில் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்துக் கொள்ளலாம். இதற்கு எந்த ஒரு ஆட்சேபம் இல்லை. ஆனால், அரசு பள்ளிகளில் மட்டுமே அரையாண்டு தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது. .என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback