மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டி கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்!
சென்னை மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டியில் கடை வைப்பதற்கு அனுமதி பெற விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டிகளை கொண்டு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இதற்கான விண்ணப்பத்தை மாநகராட்சி அலுவலகத்தில் வரும் 21 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை பெற்று கொள்ளலாம்.
வரும் 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, ஜனவரி 4 ஆம் தேதி விண்ணப்பங்கள் இறுதி செய்யப்படும்.
அதன் பின்னர் குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்களுக்கு கடைகள் ஒதுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கை
https://www.chennaicorporation.gov.in/news/news_20201210_1.pdf
Tags: தமிழக செய்திகள்
