தமிழகத்தில் இன்றுமுதல் கல்லூரி இறுதியாண்டு வகுப்புகள் தொடக்கம்..
தமிழகத்தில், இன்று முதல் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் வரும் நிலையில் டிசம்பர் 7-ம் தேதியான இன்று முதல் உயர்கல்வி நிலையங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதேநேரம் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் கல்லூரிகளை திறக்கக்கூடாது. அப்பகுதியில் வசிக்கும் மாணவர்களை கல்லூரிக்கு வர அனுமதிக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும்
மாணவர்களின் உடல் வெப்பநிலை கட்டாயம் பரிசோதிக்கப்பட வேண்டும்
விடுதிகளில் ஒருஅறைக்கு ஒரு மாணவர் மட்டுமே தங்க அனுமதிக்க வேண்டும்
மாணவர்கள் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்
Tags: தமிழக செய்திகள்
