Breaking News

கொரோனா வைரஸ் அச்சம்! விமான போக்குவரத்திற்கு தடை விதித்த சவூதி அரசு!

அட்மின் மீடியா
0

புதிய கொரோனா வைரஸ் அச்சம்! விமான போக்குவரத்திற்கு தடை விதித்த சவூதி அரசு!

சவுதி அரேபியா அரசு சர்வதேச விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது

உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடமாக கொரொனா வைரஸ் ஆதிக்கம் செலுத்து வருகிற நிலையில், இந்த வைரஸ் பரவலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. 

இந்த நிலையில் தற்போது இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், பிரிட்டன் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனால், பிரிட்டன் அரசு விமான போக்குவரத்து சேவைகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளது. 

இந்த தடையானது ஒரு வாரத்துக்கு தொடரும் என்றும், பரவல் அதிகமாக காணப்படும் பட்சத்தில் அதற்கு மேலும் நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

பிரிட்டனில் பரவி வரும் புது வைரஸ் அச்சத்தால் ஐரோப்பிய நாடுகளுக்கு விமான போக்குவரத்தை நிறுத்தி உள்ளது.

இந்நிலையில் சவுதி அரேபியா அரசும், சர்வதேச விமான போக்குவரத்தை அடுத்த ஒரு வாரத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

ஐரோப்பிய நாடுகளிலிருந்து சவுதி அரேபியாவுக்கு சமீபத்தில் வந்த மக்கள் அனைவரும் கண்டிப்பாக இரு வாரங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

Give Us Your Feedback