அபுதாபி சுற்றுலா வர அனுமதி.!! புதிய விதிமுறைகள் அறிவிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தாலும் தலைநகரான அபுதாபியில் மட்டும் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்கு வரும் நபர்கள் கொரோனாவிற்கான PCR நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருக்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது.
அபுதாபிக்குள் நுழைவதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டிருக்கும் கொரோனாவிற்கான PCR அல்லது DPI நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், இனி அபுதாபிக்குள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டிருக்கும் கொரோனாவிற்கான PCR அல்லது DPI நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருக்க வேண்டும்
அதே போல், அபுதாபிக்கு வரும் நபர்கள் அபுதாபியில் தொடர்ந்து தங்க நேரிடுமானால் அவர்கள் அபுதாபிக்கு வந்த நான்காவது மற்றும் எட்டாவது நாட்களில் கொரோனாவிற்கான PCR சோதனை மேற்கொள்வது கட்டாயமாக இருந்தது.
தற்பொழுது அதில் திருத்தம் செய்யப்பட்டு அபுதாபிக்கு வரும் நபர்கள் தொடர்ந்து அபுதாபியில் தங்கினால் அவர்கள் 6 வது நாளில் கொரோனாவிற்கான PCR சோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை 10 நாட்களாகவும் குறைக்கபட்டுள்ளது
Following the successes achieved by implementing the precautionary measures to curb the spread of Covid-19 and maintaining a low rate of confirmed cases, Abu Dhabi will welcome back international tourists from 24 December 2020. pic.twitter.com/Oq7X9qH8BF
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) December 22, 2020Abu Dhabi Emergency, Crisis and Disasters Committee has approved procedures for all UAE citizens and residents entering the emirate, including returning residents, from 24 December 2020. pic.twitter.com/9vyu22446S
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) December 22, 2020
Tags: வெளிநாட்டு செய்திகள்