Breaking News

சென்னையில் குப்பை கொட்ட கட்டணம் நிறுத்திவைப்பு

அட்மின் மீடியா
0
குப்பை கொட்ட கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை  மாநகராட்சி அறிவிப்பு
 

சென்னையில் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தின் நலைநகர் சென்னையில் வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் சொத்து வரியுடன் சேர்த்து குப்பைக்கான கட்டணம் வசூல் செய்யப்படும் என சென்னை பெருமாநகராட்சி அறிவித்திருந்தது. 
 
அதன்படி, வீடுகளுக்கு 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையும், திருமண மண்டபங்களுக்கு 1000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும், உணவு கூடங்களுக்கு 300 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையும், அலுவலகங்களுக்கு 300 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரையும், கடைகளுக்கு 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையும், விழாக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையும், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், திரையரங்குகளுக்கும் இதற்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. 
 
இதனையடுத்து குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிப்பது தற்காலிமாக நிறுத்தம் செய்யப்படுவதாக மாநகராட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback