Breaking News

உலகில் முதல்முறையாக செயற்கை கோழி இறைச்சி விற்பனைக்கு சிங்கப்பூர் அனுமதி

அட்மின் மீடியா
0

ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை கோழி இறைச்சியை விற்பனை செய்ய சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது. 


Eat Just எனும் கலிஃபோர்னிய நிறுவனம் தான் புதிய செயற்கை கோழி இறைச்சியை தயாரித்துள்ளது. அதாவது கோழியின் செல்களைப் பிரித்தெடுத்து, அவற்றுடன் சில சத்துப்பொருள்களைக் கலந்து இந்த செயற்கை கோழி இறைச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. கோழிகளின் உயிரணுக்கள் பயன்படுத்தப்பட்டாலும், அவை இறைச்சியாக மட்டுமே உருவெடுக்கும். மாறாக ரத்தம் உள்ள உயிருள்ள கோழிகள் உருவாக்கப்படுவதில்லை. இதை வளர்ப்பு இறைச்சி என்றும் கூறலாம்


இதன் தயாரிப்பு முறை, பாதுகாப்பு சோதனை மூலப்பொருள் நச்சுத்தன்மை கொண்டதா, உணவுப் பொருள் தரம் தொடர்பான விதிமுறைகளை அந்தப் பொருள் பூர்த்தி செய்கிறதா என்பன போன்றவை ஆராயப்பட்டதாகவும் ஆகியவற்றுக்குப் பிறகே செயற்கை கோழி இறைச்சியை சிங்கப்பூரில் விற்க அனுமதி அளிக்கப்பட்டதாக அந்த நிறுவனம்  தெரிவித்துள்ளது.இந்த செயற்க்கை கோழி இறைச்சி  சிறு துண்டுகளாக விற்கப்படும் என்றும் சிங்கப்பூரிலேயே தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கை கோழி இறைச்சி துண்டுகள் எப்போது விற்பனைக்கு வரும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

Source:

https://www.india.com/viral/no-more-killing-animals-singapore-becomes-first-country-to-approve-sale-of-lab-grown-meat-4239922/

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback