வங்கியில் இருந்து வருவது போல் வரும் மெசஜ்: எச்சரிக்கை தேவை தமிழக போலிஸ் அறிவிப்பு
உங்கள் போனில் திடிரென ஒரு மெசஜ் வரும் அதில் உங்கள் கணக்கில் பணம் வந்துள்ளது என ஒரு மெசஜ் வரும் நீங்களும் அதனை உண்மை என நம்புவீர்கள் (ஆனால் உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்து இருக்காது வெறும் மெசஜ் மட்டுமே போலியாக வரும்)
மர்ம கும்பல் உடனடியாக உங்கள் வாட்ஸப்க்கு மெசஜ் அல்லது உங்களுக்கு கால் வரும் அதில் உங்கள் வங்கி கணக்கில் தவறாக பணம் அனுப்பிவிட்டோம் உடனே பணம் அனுப்புங்கள் என குறுஞ்செய்தி அனுப்பி நூதன முறையில் பணத்தை பறிக்கும் கும்பலிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று என்று அடையாறு துணை ஆணையர் விக்ரமன் சமூக வலைத்தளத்தில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
யாரேனும் உங்களை தொடர்புகொண்டு தவறுதலாக அல்லது அதிகமாக பணம் அனுப்பிவிட்டதாகவும் எனவே பணத்தை திருப்பி அனுப்புமாறு கூறினால் போலியாக அனுப்பப்படும் SMS களை மட்டும் பார்த்து ஏமாற வேண்டாம். உங்கள் வங்கி கணக்கை பரிசோதித்து கொள்ளவும். #cybercrime #fraudalert pic.twitter.com/trisHB1kaL
— DCP Adyar (@DCP_Adyar) December 28, 2020
Tags: தமிழக செய்திகள்