ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு அரசின் இலவசப் பயிற்சி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு படிப்பவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உணவு,தங்குமிடம் வழங்கி இலவச பயிற்சி வழங்கப்படுகிறது இதற்கான அறிவிப்பை அரசு தேர்வாணையப் பயிற்சி மையம் அறிவித்துள்ளது.
கல்விதகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்லூரிகளிலிருந்து இளநிலைப் பட்டம் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அனைத்து வகுப்பினருக்கும் குறைந்தபட்ச வயது 21 ஆக இருக்கவேண்டும்.
இதர
வகுப்பினர் 32 வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி.
பிரிவினர் 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர்,
பிற்படுத்தப்பட்டோர்-இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சீர்மரபினர் வகுப்பினர்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க
வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தேவையானவை:
ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் சான்றிதழ்,
சாதிச் சான்றிதழ்,
இருப்பிடச் சான்றிதழ்,
3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ,
ஒரு ஸ்டாம்ப் சைஸ் போட்டோ
டெபாசிட் தொகை ரூ.3000 (திருப்பி அளிக்கக்கூடியது)
விண்ணப்பிக்க:
பயிற்சி காலம்
தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை
சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் முழு நேரமும்,
வார நாட்களில் மாலை 6.30 மணி முதல் 8.30 மணிவரை சிறப்பு வகுப்புகளும் நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
28.12.2020
மேலும் விவரங்களுக்கு:
Tags: கல்வி செய்திகள்
