Breaking News

காயலாங்கடையில் விற்கப்பட்ட பள்ளி பாடப்புத்தகங்கள்! மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் கைது!

அட்மின் மீடியா
0

காயலாங்கடையில்  இலவச பாடப் புத்தகங்களை விற்றது  தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


மயிலாடுதுறையில்  பெருமாள்சாமி என்பவருக்கு சொந்தமான காயலாங்கடையில்  6 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான இலவச பாடப்புத்தகங்கள்  இருப்பதாக புகார்கள் எழுந்தது. 

இதனையடுத்து, கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அந்த கடைக்கு சென்று ஆய்வு செய்ததில் 2019-2020 ஆம் ஆண்டுக்கான சுமார் 5 ஆயிரம் பாடபுத்தகங்கள் இருந்தது தெரியவந்தது.அதன்பின்பு  புத்தகங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் காவல்துறையினரிடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து பழைய இரும்பு கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளர்களிடம் விசாரித்ததில் இலவச பாடப் புத்தகங்களை விற்பது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் காயலங்கடை உரிமையாளர் பெருமாளையும் போலீசார் கைது செய்து, மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback