Breaking News

குற்றாலம் அருவிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி.!

அட்மின் மீடியா
0

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், சுற்றுலாத் தலங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  குற்றாலம் அருவகளில் குளிக்க நாளை (15-ம் தேதி) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. 




காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சுற்றுலாப் பயணிகள் மற்றும் குற்றாலம் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Tags: தமிழக செய்திகள்

Share this