8 ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் 500 உதவித்தொகை விண்ணப்பிப்பது எப்படி?
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு NMMS தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையோர்:மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் (அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்) 2020- 2021ஆம் கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்கும் முறை:
NMMS தேர்விற்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய தேர்வர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்
தேர்வு நடைபெறும் நாள்:
21.02.2021
விண்ணப்பம் டவுன்லோடு செய்ய:
https://tnegadge.s3.amazonaws.com/notification/NTS/1605879117.pdf
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் மாணவர்கள் தாம்
பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50/- உடன் அளிக்கவேண்டும்
பள்ளித் தலைமையாசிரியர்கள் அருகிலுள்ள வட்டார வள மையங்களின் (BRC) உதவியுடன் இணையதள வசதி கொண்ட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தங்கள் பள்ளி மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகப் பதிவு செய்தல் வேண்டும்.
அரசு பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு 9- ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாதம் ரூபாய் 500 வீதம் ஆண்டு ஒன்றுக்கு உதவித் தொகையாக ரூ. 6,000 வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு:
https://tnegadge.s3.amazonaws.com/notification/NTS/1605879117.pdf
https://tnegadge.s3.amazonaws.com/notification/NTS/1605879192.pdf
Tags: கல்வி செய்திகள்