அமீரகத்தில் போன் மூலம் ஒருவர் மற்றவரை அவமதிப்பு செய்தால் 6 மாதம் சிறை அல்லது 1 லட்சம் அபராதம்..வெளியானது புதிய சட்டம்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொலைபேசி அழைப்பின் மூலமாகவோ அல்லது மெசேஜ் மூலமாகவோ ஒருவர் மற்றொருவரை அவமதிப்பு அல்லது அவதூறு செய்ததாக குற்றம் சாற்றப்பட்டால் அவருக்கு 5,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டாட்சி பொது வழக்கு ஆணையம் தற்பொழுது அறிவித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் ஒரு லட்சம் ஆகும்
கூட்டாட்சி தண்டனைச் சட்டத்தின் 374 வது பிரிவின்படி, தொலைபேசி மூலமாகவோ அல்லது மற்றவர்களின் முன்னிலையிலோ ஒரு நபர் மற்றொரு நபரை அவதூறு அல்லது அவமதிப்பு செய்தால் அந்நபருக்கு 5000 திர்ஹமுக்கு மிகாமல் அபராதம் அல்லது 6 மாதத்திற்கு மிகாமல் சிறை தண்டனை விதிக்கப்படும்.
மூன்றாம் தரப்பின்னர் முன்னிலையில்லாமல் ஒரு நபர் மற்றொரு நபரை அவமதிப்பு செய்தால் அவருக்கு 5000 திர்ஹமுக்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
جريمة القذف والسب بطرق الهاتف #قانون #ثقف_نفسك #ثقافة_قانونية #خلك_حكيم #الامارات #الامارات_العربية_المتحدة #النيابة_العامة_الاتحادية@UAE_PP pic.twitter.com/STEykAvyHF
— النيابة العامة (@UAE_PP) December 12, 2020
Tags: வெளிநாட்டு செய்திகள்