சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து தற்போது ரூ.660 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த மாதம் வரை ரூ.610 ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இந்த மாதம் ரூ.50 உயர்ந்து ரூ.660 ஆக உள்ளது.
மேலும் வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு விலை ரூ.62 அதிகரித்து சிலிண்டர் விலை ரூ.1,293-க்கு விற்பனை செய்யப்படுகிறது
Tags: தமிழக செய்திகள்