காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பு 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!வானிலை ஆய்வு மையம்
அட்மின் மீடியா
0
புரெவி' புயல், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து விட்டதால், மிக கனமழை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டு உள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால் நான்கு மாவட்டங்களில், சில இடங்களில் கனமழை பெய்யும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அத்னபடி ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மற்ற மாவட்டங்களை பொறுத்தவரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
Tags: தமிழக செய்திகள்
