அடுத்து வரும் 4 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் - வானிலை ஆய்வு மையம்
அட்மின் மீடியா
0
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 2
8.12.2020 அன்று தென் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.
http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
