Breaking News

தமிழகத்தில் வரும் 16, 17ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கியது. பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

 


கடந்த நவம்பர் மாதம் 21-ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்தம், 24-ஆம் தேதி அதிகாலை நிவர் புயலாக  வலுவடைந்து  25-ஆம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. 

மேலும் அடுத்து நவம்பர் 30-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்தம், டிசம்பர் 1-ஆம் தேதி மாலை தென்மேற்கு வங்கக் கடலில் புரெவி புயலாக உருவானது. 

இலங்கையின் வடக்கு பகுதிகளில் நகர்ந்த இந்த புயல் டிசம்பர் 3-ஆம் தேதி பாம்பனில் நிலைகொண்டிருந்தது. தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இந்த புயல் வலுவிழந்தது. 

அதன்பின்பு கடந்த சிலதினங்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவிவருகிறது. மேலும் இந்த வறண்ட வானிலை இரு நாட்களுக்கு தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு பருவக் காற்று எதிரொலியாக வரும் 16,17 தேதிகளில் தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கை:

http://imdchennai.gov.in/tn_fc.pdf

Tags: தமிழக செய்திகள்

Share this