Breaking News

FACT CHECK: பூந்தமல்லியில் மழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ? உண்மை என்ன

அட்மின் மீடியா
0

சமூக வலைதளங்களில் பலரும்  தற்போது பூந்தமல்லியில் நடந்த விபத்து என்று  ஒரு வீடியோவை  ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகையில் புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. 

மேலும் புயல் குறித்த செய்திகளே ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அதிகம் ஷேர் செய்து வருகின்றார்கள்

இந்நிலையில், சென்னை பூந்தமல்லி சாலையில்  சென்று கொண்டிருக்கும் இருசக்கர வாகனத்தின் மீது கட்டிடத்தில் இருந்த விளம்பர பலகை போல் ஒன்று விழுந்து விபத்து  வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஆனால் இந்த விபத்து சென்னையில் நடந்து இல்லை

அந்த விபத்து பாகிஸ்தான் கராச்சியில் கடந்த 06.08.2020 அன்று நடந்தது



ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback