மருத்துவ கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்" - முதல்வர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், '7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும்.
ஸ்காலர்ஷிப் அனுமதி வரும் வரை காத்திராமல் உடனடியாகச் செலுத்த சூழல் நிதியை உருவாக்க உத்தரவிட்டுள்ளேன். கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் என அனைத்தையும் அரசே செலுத்தும்.என அறிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்


