கனமழை எச்சரிக்கை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழகத்தில் பருவமழை தொடங்கியதிலிருந்து பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் மூன்று நாட்களாக மழை பொழிவு குறைந்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவ 24, 25 ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நவ24 ஆம் தேதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Heavy Rainfall Warning
— TN SDMA (@tnsdma) November 21, 2020
As per IMD, Heavy rain is likely to occur at isolated places over Nagapattinam, Thanjavur, Tiruvarur, Pudukottai, Sivagangai and Ramanathapuram districts on 23.11.20.
----TNSDMA
Tags: தமிழக செய்திகள்