தியேட்டர்கள் திறக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் நவ.10-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது அதில்...
- திரையரங்க வளாகத்திற்குள் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்முககவசம் அணியாதவர்களை திரையரங்கினுள் அனுமதிக்கக்கூடாது.
- திரையரங்கில் 50% இருக்கைகளை மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து படம் பார்க்க அனுமதிக்க வேண்டும்
- திரையரங்குக்கு வெளியேயும், பொது இடங்களிலும் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
- திரையரங்கின் நுழைவாயிலில் மக்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும்
- பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து வரிசையில் வரும் வகையில் குறியீடுகள் போட வேண்டும்.
- ஒவ்வொரு திரைப்படக் காட்சிக்கும் இடையே போதுமான கால இடைவெளி இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திரையரங்குகளில் உணவு, குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை.
- நோய்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள திரையரங்குகளை திறக்க அனுமதி இல்லை.
- அனைவரும் ஆரோக்கிய சேது செயலியினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
Tags: தமிழக செய்திகள்