பொய்யான வாட்ஸ்-அப் வேலைவாய்ப்பு தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்: வருமானவரிதுறை எச்சரிக்கை
வருமான வரித் துறை அறிவிப்புவருமான வரித் துறையில் வேலைவாய்ப்பு தொடர்பாக வாட்ஸ்-அப் செயலியில் உலவும் தகவல் பொய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருமான வரித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வாட்ஸ்அப்பில் 12.10.2020 தேதியிட்ட அறிவிக்கைபோல் வெளியாகியுள்ள செய்தியில்,
தமிழ்நாடு வருமான வரித் துறையில் கண்காணிப்பாளர், தனிச் செயலாளர், ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆள் தேர்வு நடைபெறுவதாகவும் 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல் முற்றிலும் பொய்யான தகவலாகும்.
வழக்கமாக தனி செயலாளர்கள் பணிக்கு பதவி உயர்வு மூலமே நியமிக்கப்படுவர்; இப்பணியில் நேரடி நியமனம் இல்லை.
மேலும் கண்காணிப்பாளர், உதவியாளர் போன்ற பணியிடங்களே வருமான வரித் துறையில் இல்லை.எனவே, மக்கள் இதுபோன்றபொய்யான தகவல்களை நம்பிஏமாறக் கூடாது.
எனவே, வருமானவரித் துறையில் ஆட்சேர்ப்பு நடத்துவதாக வெளியாகியுள்ள அறிவிக்கை போலியானது என்றும், வருமான வரித் துறையால் அது வெளியிடப்படவில்லை என்றும் தெளிவு படுத்தப்படுகிறது. என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் சரிபார்த்துக் கொள்ளும் படியும், ஆட்சேர்ப்பு குறித்த சந்தேகங்கள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் ஆணையத்தின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளும் படியும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.வாட்ஸ்அப்பில் பரவும் இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் வருமானத் துறை எச்சரித்துள்ளது.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671884
Tags: தமிழக செய்திகள்