பீகாரில் முஸ்லிம்களின் ஓட்டை பிரித்து பிஜேபியை வெற்றியடைய செய்ய மறைமுகமாக உதவி செய்தாரா உவைசி?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பீகாரில் அசாதுதீன் உவைசி அவர்கள் அரசியல் பற்றிய எந்த ஒரு அனுபவமும் இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டதின் காரணமாக இன்று மிகப்பெரிய ஒரு இழப்பை அடைய செய்திருக்கின்றது அவர் முஸ்லிம்களின் ஓட்டை பிரித்து பிஜேபியை வெற்றியடைய செய்ய மறைமுகமாக உதவி செய்கிறார் என்று ஒரு பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அட்மின் மீடியாவின் வாசகர்களே நாம் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் பீகாரில் அசாதுதீன் உவைசி அவர்கள் போட்டியிட்ட தொகுதிகள் மொத்தம் 24 அதில் 14 தொகுதிகளில் உவைசி அவர்களின் கட்சியும் மீதம் உள்ள தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறார்கள் அதில் ஐந்து இடங்களில் உவைசி கட்சி வெற்றி பெறுகிறார்கள்
மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த கணக்கில் உள்ள 100, 200,500, 1000, ஓட்டுகள் வித்தியாசத்தில் எந்த ஒரு தொகுதியிலும் உவைசி கட்சியினர் போட்டியிட்ட தொகுதிகளில் ஓட்டை பிரிக்க வைக்க வில்லை
எந்த தொகுதிகளில் ஆயிரம் ஓட்டுகளை குறைவாக இருக்கிறதோ அந்த இடங்களில் அவர்கள் போட்டியிடவேவில்லை
அசாதுதீன் உவைசி அவர்கள் போட்டியிட்டதின் காரணமாக எந்த ஒரு ஓட்டு சதவீதமும் பாதிக்கப்படவில்லை. அதற்கான ஆதாரங்களை கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது
சமூக வலைத்தளங்களில் அவர்களைப் பற்றி தவறான சிந்தனையை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு பலவிதமான வதந்திகள் பொய்யான தகவல்களை பரப்பி விடுகிறார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
மேலும் நீங்கள் தெரிந்து கொள்ள
சாதாரண ஒரு மனிதனாக நாம் சிந்திக்கும்போது உவைசி அவர்கள் செய்தது சிறந்த விஷயம் தான் என்று சிந்திக்கத் தோன்றுகிறது
காரணம் நாம் ஆண்ட சமுதாயம் இனி ஆளும் சமுதாயம் என்று வாய்கிழிய பேசும் நாம் இனி நாம் ஆள்வதற்கு உண்டான முயற்சிகளை ஏதாவது செய்தோமா???
இனி எத்தனை காலம் தான் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து ஒன்று இரண்டு சீட்டுக்கு மாரடித்து பல தடவை நாம் முதுகில் குத்து வாங்குவது
தற்சமயம்
அங்கே நடந்தது என்ன தனித்துப் போட்டியிட்ட உவைசி பல தொகுதிகளில் நல்ல
வாக்குகளை பெற்றிருக்கிறார் மேலும் 5 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறார் இது
அவருக்கு கிடைத்த முதல் வெற்றி அல்லவா
வரக்கூடிய
காலங்களில் இன்னும் அவரது வெற்றி பிரகாசமாக இருக்கும் அவர் நடந்து கொள்ளும்
விதத்தைப் பொறுத்து இதை நாம் பாசிட்டிவாக சிந்திக்க வேண்டுமே தவிர
நெகட்டிவாக சிந்தித்து இதுபோன்று ஆர்வமாக வருபவர்களை முட்டுக்கட்டை
போடக்கூடாது
இதன் மூலம் நாம் தமிழகத்தில் பெறவேண்டிய படிப்பினை என்னவென்றால்
அனைத்து
இஸ்லாமிய கட்சிகள் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரே குடையின் கீழ்
நின்று வரக்கூடிய தேர்தலை சந்தித்தால் முதல்வரை தீர்மானிக்கும் சக்தி கூட
நமக்கு கிடைக்கலாம்
ஆகவே அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையோடு செயல்பட அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவி செய்வானாக!!!!
ஒன்றிணைந்து விரைவில் வெற்றிக் கனியைப் பறிப்போம் இன்ஷா அல்லாஹ்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
200 ஓட்டுக்கள் வித்தியாசம் உள்ள தொகுதிகள்
Ramgarh தொகுதி ஓட்டு வித்யாசம் 189
Barbigha தொகுதி ஓட்டு வித்யாசம் 113
Hilsa தொகுதி ஓட்டு வித்யாசம் 12
1000 ஓட்டுக்கள் வித்தியாசம் உள்ள தொகுதிகள்
Bachhwara தொகுதி ஓட்டு வித்யாசம் 484
Bakhri தொகுதி ஓட்டு வித்யாசம் 777
Bhorey தொகுதி ஓட்டு வித்யாசம் 462
Chakai தொகுதி ஓட்டு வித்யாசம் 581
Dehri தொகுதி ஓட்டு வித்யாசம் 464
Kurhani தொகுதி ஓட்டு வித்யாசம் 712
Matihani தொகுதி ஓட்டு வித்யாசம் 333
Parbatta தொகுதி ஓட்டு வித்யாசம் 951
AIMIM போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 தொகுதிகளும் ஓட்டு விவரங்கள்
Amour தொகுதியில் பெற்ற ஓட்டுக்கள்
AIMIM- 94108
JDU- 41812
INC- 31475
Bahadurganj தொகுதியில் பெற்ற ஓட்டுக்கள்
AIMIM-74528
VIP- 38420
INC- 24319
Baisi தொகுதியில் பெற்ற ஓட்டுக்கள்
AIMIM-68162
BJP-51850
RJD-37918
Jokihat தொகுதியில் பெற்ற ஓட்டுக்கள்
AIMIM - 59523
RJD- 51980
BJP- 48892
Kochadhaman தொகுதியில் பெற்ற ஓட்டுக்கள்
AIMIM -79548
JDU- 43476
RJD - 25740
மேலும் AIMIM போட்டியிட்டு தோல்வி அடைந்த தொகுதிகளில் பெற்ற ஓட்டு விவரங்கள்
Kishanganj தொகுதியில் பெற்ற ஓட்டுக்கள்
INC-60599
BJP-59378
AIMIM- 41727
Chhatapur தொகுதியில் பெற்ற ஓட்டுக்கள்
BJP-93570
RJD-71712
AIMIM - 1984
Thakurganj தொகுதியில் பெற்ற ஓட்டுக்கள்
RJD-79354
IND-55845
AIMIM -18890
Sikta தொகுதியில் பெற்ற ஓட்டுக்கள்
CPIML-48730
IND- 46640
AIMIM -8511
Araria தொகுதியில் பெற்ற ஓட்டுக்கள்
INC-102855
JDU-55027
AIMIM -8922
Manihari தொகுதியில் பெற்ற ஓட்டுக்கள்
INC- 82253
JDU- 61574
AIMIM - 2458
Barari தொகுதியில் பெற்ற ஓட்டுக்கள்
JDU-81320
RJD-70473
AIMIM-6564
Pranpur தொகுதியில் பெற்ற ஓட்டுக்கள்
BJP-79592
INC-76326
AIMIM - 507
Narpatganj தொகுதியில் பெற்ற ஓட்டுக்கள்
BJP- 98350
RJD- 69679
AIMIM- 5493
Phulwari தொகுதியில் பெற்ற ஓட்டுக்கள்
CPIML- 74039
JDU- 60090
AIMIM- 3986
Sahebganj தொகுதியில் பெற்ற ஓட்டுக்கள்
VIP- 81036
RJD-65643
AIMIM -4048
SahebpurKamal தொகுதியில் பெற்ற ஓட்டுக்கள்
RJD -64270
JDU- 50424
AIMIM -7889
Sherghati தொகுதியில் பெற்ற ஓட்டுக்கள்
RJD- 61419
JDU- 44970
AIMIM - 14951
Kasba தொகுதியில் பெற்ற ஓட்டுக்கள்
INC-77110
LJP-60029
AIMIM- 5302
Raniganj தொகுதியில் பெற்ற ஓட்டுக்கள்
JDU- 81874
RJD- 79479
AIMIM -2411
Tags: FACT CHECK
