Breaking News

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள் என்ன என்று தெரியுமா?

அட்மின் மீடியா
0

இம்மாதம் 21, 22 ஆம் நாள்களிலும் மற்றும் அடுத்த மாதம் 12,13 ஆம் நாட்களிலும் வாக்காளர் பட்டியலில் (Election Draft List) பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது.



எனவே சிறப்பு முகாம் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவோ, வாக்காளர் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் நான்கு நாள் நடைபெறும் சிறப்பு முகாம்களை கட்டாயம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.


உங்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடப்பெற்றிருக்கிறதா? உங்கள் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? என்பதை  நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். 


ஒருவேளை உங்கள் பெயர் இல்லையென்றால், வாக்காளர் திருத்தம் முகாம் மூலம் விண்ணப்பித்துகொள்ளலாம்.+-


வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் கீழ் வரும்  தேதிகளில் உங்கள்  பகுதியில் உள்ள வாக்குசாவடிகளில் நடைபெறும்


சிறப்பு முகாம் 

நவம்பர் மாதம்:

21.11.2020

22.11.2020


மற்றும்


டிசம்பர் மாதம்:

12.12.2020

13.12.2020

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்:

முகவரி சான்று (கீழ்கண்ட ஆவணங்கலீல்  ஏதாவது ஒன்று - நகல்)


1.பாஸ்போர்ட்

2.கேஸ் பில்

3.தண்ணீர் வரி ரசீது

4.ரேஷன் அட்டை

5.வங்கி கணக்கு புத்தகம்

6.ஆதார் கார்டு

7. ஓட்டுனர் உரிமம்

வயது சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)


1.பள்ளி சான்றிதழ்

2.பிறப்பு சான்றிதழ்

3.பான் கார்டு

4.ஆதார் கார்டு

5.ஓட்டுனர் உரிமம்

6.பாஸ்போர்ட்

மற்றும்

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 1

புதியதாக நீங்கள் ஆன்லைனில் உங்கள் வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க

https://www.adminmedia.in/2020/08/blog-post_68.html

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback