Breaking News

புயல் கரையை கடந்தாலும் மழை தொடரும்..வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த புயல் கரையை கடந்த பின்னரும் பல பகுதிகளில் சூறாவளி காற்று வீசும், உள் மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பதூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
தீவிர புயல் கரையை கடந்த பின்னர் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழந்து புயலாகவும் அதற்கு அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

 இதன் காரணமாக 26ஆம் தேதியன்று உள் மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் பலத்த மழை பெய்யக்கூடும்.

சூறாவளிக் காற்று மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இடை இடையே 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். 

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.

Give Us Your Feedback