பெண்கள் மின்சார ரெயில்களில் செல்ல அனுமதி - தெற்கு ரெயில்வே
சென்னை:தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-
அத்தியாவசிய பணிகள் பட்டியலின் கீழ் வராத பெண் பயணிகள் சாதாரண நேரங்களில் மின்சார ரயில்களில் பயனிக்கலாம் அதாவது
காலை 7 மணி வரையிலும்,
காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும்,
இரவு 7.30 மணிக்கு பிறகும்
திங்கள் முதல் சனிக்கிழமை வரை மின்சார ரெயில்களில் பயணிக்கலாம்.
அதேவேளையில் ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் முழுவதும் மின்சார ரெயில்களில் அத்தியாவசிய பட்டியலின் கீழ் வராத பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும் இவர்களுக்கான ரெயில் டிக்கெட், சாதாரண நேரங்களில், தாங்கள் புறப்படும் ரெயில் நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
அத்தியாவசிய பட்டியலின் கீழ் வராத பெண் பயணிகள் கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில், அதாவது காலை 7 முதல் 10 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 7.30 மணி வரையிலும் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை பயணிக்க அனுமதி இல்லை என தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது
Southern Railway permits lady passengers during non-peak hours in Chennai suburban train services w.e.f 23-11-2020 pic.twitter.com/uiZOGk0PFi
— Southern Railway (@GMSRailway) November 21, 2020
Tags: தமிழக செய்திகள்