Breaking News

நோட்டாவுக்கு அதிக வாக்கு கிடைத்தால் தேர்தலை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

அட்மின் மீடியா
0

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மின்னணு வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்களுக்கான சின்னங்களைப் போல நோட்டாவும் கடைசியில் இடம்பெற்றிருக்கும். 



தேர்தலில் எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் நோட்டாவுக்கான பொத்தானை அழுத்தலாம். இதன் மூலம் அந்தத் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விரும்பவில்லை என்று அர்த்தமாகும்


இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும் வழக்கறிருமான அஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் ஒரு தொகுதியில் தேர்தல் நடை பெறும்போது அந்தத் தொகுதியில் வேட்பாளரைவிட நோட்டா வுக்கு அதிக வாக்குகள் வந்தால் அந்தத் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். மேலும் அங்கு 6 மாதத்துக்குள் புதிதாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது அம்மனு மீதான விசாரனை விரைவில் வரும் என எதிர்பார்க்கபடுகின்றது

source:

https://theprint.in/india/ec-must-nullify-polls-if-nota-gets-most-votes-bjp-leaders-plea-to-supreme-court/554203/


Tags: இந்திய செய்திகள்

Share this