நாளை முதல் மீண்டும் கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்!
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக சென்னை முதல் நாகை வரை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் , நவம்பர் மாத பிற்பகுதியில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
அடுத்த 24 மணிநேரத்தைப் பொறுத்தவரை , தமிழக கடலோர பகுதியில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் .
http://www.imdchennai.gov.in/
Tags: தமிழக செய்திகள்
