FACT CHECK: திருப்பூரில் சின்டெக்ஸ் தண்ணீர் டேங்க் வைக்க ரூ7.70 லட்சம் செலவு என பரவும் புகைபடத்தின் உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் திருப்பூரில் சின்டெக்ஸ் தண்ணீர் டேங்க் வைக்க ரூ7.70 லட்சம் செலவு என்று ஒரு புகைபடத்தை ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் திருப்பூர் மாவட்டம், திருப்பூர் 50வது வார்டு ஈஸ்வரமூர்த்தி லே அவுட் பகுதியில் உள்ளது ஆகும்
அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் அமைக்க ஆழ்குழாய் கிணறு அமைத்து ,மோட்டர் ரூம் கட்டி அந்த பகுதியில் நான்கு இடங்களில் குழாய் பொருத்தி மோட்டார் திட்டு அமைக்கப்பட்டதுடன். டேங்க் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.இதன் மொத்த மதிப்பீடு 7.70 லட்சம் ரூபாய்.
மேலும் இந்த திட்டத்தின் மொத்த பணிகள் குறித்து விரிவாக குறிப்பிடாமல் டேங்க் மீது செலவு என 7.70 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்தது இதனை சிலர் சமூக வலைதளங்களில் ஒரு டேங்க் அமைக்க இவ்வளவு செலவா என பதிவிட்டு வருகின்றார்கள்
இது தொடர்பாக தகவலறிந்த எம்.எல்.ஏ குணசேகரன் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மாநகராட்சி நிதியில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தை எம்.எல்.ஏ என்ற முறையில் திறந்து வைத்ததாகவும் அங்கு செய்யப்பட்ட மொத்த பணிகளின் செலவு தான் 7.70 லட்சம் எனவும் விளக்கம் அளித்துள்ளார். எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
(2/2) pic.twitter.com/Qcm85ptCC2
— S Gunasekaran MLA (@GunasekaranMLA) October 11, 2020
Tags: FACT CHECK மறுப்பு செய்தி