Breaking News

FACT CHECK:வாட்ஸப் ஸ்டேட்டஸ் மூலம் தினமும் ரூ 500 சம்பாதிக்கலாம் என பரவும் வதந்தி/ யாரும் நம்பாதீங்க

அட்மின் மீடியா
0

 இந்த செய்தியை படிச்சிட்டு கண்டிப்பா மத்தவங்களுக்கு ஷேர் பண்ணுங்க அப்பதான் மற்றவர்களுக்கு தெரியும்

 


கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  வாட்ஸப் ஸ்டேட்டஸ் மூலம் தினம் ரூபாய் 500 சம்பாதிக்கலாம் என்று  ஒரு லின்ங்கை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

முதலில் நீங்கள் ஒன்றை நம்பவேண்டும்  இது போல் சதுரங்கவேட்டை செய்திகளை நம்பாதீர்கள்

அந்த லின்ங்கில் சென்றால் நம்முடைய மொபைல் எண் அல்லது நம் இமெயில் முகவரி கேட்கின்றார்கள் அதன் பிறகு நீங்கள் மெசஜை ஷேர் செய்யுங்கள் என்று சொல்கின்ரார்கள் 

மெசஜை ஷேர் செய்துவிட்டு வந்தால் நாங்கள் தொடர்பு கொள்கின்றோம் என மெசஜ் வருகின்றது

இது போல் உங்கள் ஆசையை தூண்டி உங்கள் மொபைல் எண் வைத்து ஏதேனும் செய்யலாம் எனவே அந்த லின்ங் உங்களுக்கு வந்தால் அதில் முயற்சி செய்து பார்க்காதீர்கள்

மேலும்  நம் தென்காசி மாவட்ட காவல்துறையும் எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது அதில்
 
காவல்துறை எச்சரிக்கை!!
உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் 30 நபர்களுக்கு மேல் பார்ப்பதன் மூலம் தினமும் ரூபாய் 500 வரை சம்பாதிக்கலாம் என்று உங்களின் தொலைபேசி எண் மூலம் அந்த பக்கத்தில் கணக்கு தொடங்க வைத்து,மேலும் நீங்கள் இதன் மூலம் பெறும் பணத்தை கூகுள் பே, போன் பே மூலமாகத்தான் பெற முடியும் என்று கூறி உங்களின் வங்கி தகவல்களை பெற்று அதன் மூலம் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடும் புதியவகை மோசடி கும்பல் தற்போது வாட்ஸ்அப் மூலம் பரவி வருகிறது. எனவே மக்கள் இதுபோன்ற மோசடி வேலை செய்யும் நபர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும்!! என  அறிவித்துள்ளார்கள்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

  அட்மின் மீடியாவின் ஆதாரம்
 

Tags: மறுப்பு செய்தி FACT CHECK

Give Us Your Feedback