Breaking News

டைனோசர் முட்டை' என்று வெளியான செய்தி! உண்மை என்ன? ஆய்வாளர்கள் பதில் என்ன?

அட்மின் மீடியா
0

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ஏரியில் மண் எடுத்து தூர்வாரப்பட்டப்போது, பெரிய வடிவில் முட்டைகள் மற்றும் கடல்வாழ் நத்தைகளின் படிமங்கள் கிடப்பதாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பல வெளியானது. 

 


இந்நிலையில், அந்த முட்டைகளை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், அது டைனோசர் முட்டை இல்லை அவை அம்மோனைட் படிவம் அதாவது சுண்ணாம்பு பாறைகள் என்றும், அவை கடலில் இருந்து உருவானவை என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

 

அதன் உருண்டை வடிவ படிவத்தை வைத்து அது டைனோசர் முட்டை என்று பலரால் செய்திகள் பரப்பப்பட்டதாக கூறியுள்ளனர்.


பெரம்பலூர் பகுதியில், கல்மர துண்டுகள் பல ஆண்டுகளாக ஆங்காங்கே கண்டறியப்பட்டு வருவதால், இதுபோன்ற குழப்ப நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் ஆய்வாளர்கள் இது பற்றி மேலும் சோதித்து வருகின்றனர்.

 

Source:

https://www.hindutamil.in/news/tamilnadu/594098-it-s-not-dinosaurs-eggs-1.html

 

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadudinosaur-eggs-found-perambalur 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback