Breaking News

#BREAKING பண்டிகை காலங்களில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் : பிரதமர் மோடி !

அட்மின் மீடியா
0
நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்றினார் அதில் ஊரடங்கால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. 
 
 

 
பொதுமுடக்கம் முடிவுக்கு வந்தாலும் கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை. கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடர்கிறது என்று கூறிய பிரதமர் மக்கள் பலரும் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்வதை பார்க்கமுடிகிறது. 
 
முக கவசம் அணியாமல் வெளியே செல்வது உங்களுக்கும் குடும்பத்துக்கும் ஆபத்து ஏற்படுத்தும் நாம் அலட்சியமாக இருக்க கூடாது. அப்படி சிலர் அலட்சியமாக இருப்பது வருத்தம் அளிக்கிறது.
 
தடுப்பூசி கண்டுபிடிக்கும்வரை மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்.அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் தயாராக உள்ளது என்று கூறினார் 
 
மேலும்கொரோனா கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில் மக்கள் அலட்சியம் காட்டாமல், அனைவரும் விழிப்புடனும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
 
அனைவரும் 2 அடி இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் நாம் பொறுப்பற்று இருந்தால் அதற்கான விலையை கொடுக்க நேரிடும்அனைத்து மக்களுக்கும் பண்டிகைகளுக்கான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback