ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களுக்காக எனது தோழி திட்டம் அறிமுகம்
அட்மின் மீடியா
0
ரயிலில் பயனிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு 'எனது தோழி' நடவடிக்கையை தொடங்கியது இந்திய ரயில்வே. இந்த திட்டத்தின் கீழ் ரயிலில் அவசரத் தேவைக்கு '182' என்ற எண்ணுக்கு போன் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகள் புறப்படும் ரயில் நிலையத்திலிருந்து, சென்றடையும் ரயில் நிலையம் வரை அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில், 'எனது தோழி' நடவடிக்கையை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் தனியாக ரயிலில் செல்லும் பெண்கள் ரயில்வே காவல்துறையின் 182 என்ற எண்ணில் தகவல் தெரிவித்து விட்டால் உங்கள் பாதுகாப்பை ரயில்வே காவல் உறுதி செய்யும்.
ஒவ்வொரு முக்கிய ஸ்டேசன்களிலும் ரயில் நிற்கும்போது தகவல் தெரிவித்த பெண்ணின் இருக்கைக்கு வந்து காவலர்கள் பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வர்.
Tags: தமிழக செய்திகள்
