துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சரிந்த கட்டடங்கள்! வீடியோ
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானது.
ஏகியன் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது
நிலநடுக்கத்தால் இஸ்மிர் நகரில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், பீதி அடைந்த மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் இன்னும் தெளிவாக வெளியிடப்படவில்லை.
மேலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சிறிய அளவில் சுனாமி பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆனால் இதுவரை உயிரிழப்பு பற்றிய தகவல் வெளிவரவில்லை.
#BREAKING : In the turkish city of Izmir, an earthquake with a magnitude of 6.6 hit. At least 10 buildings collapsed.#izmir #Turkey pic.twitter.com/nMdEEie3d7
— Sushmit Patil Сушмит Патил सुश्मित पाटिल (@PatilSushmit) October 30, 2020
Tags: வெளிநாட்டு செய்திகள்
