Breaking News

நீட் தேர்வில் புதிய சாதனை படைத்த தமிழக அரசு பள்ளி மாணவன்!

அட்மின் மீடியா
0

 நீட் தேர்வில் இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் தமிழக மாணவர் முதலிடம் பெற்றுள்ளார் இது குறித்து கூறப்படுவதாவது: கடந்த மாதம் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது அதற்கான ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. 

இதில் இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஜீவித்குமார் 720க்கு 664 மார்க்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 

இவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்துள்ளார். இவரது தந்தை நாராயணசாமி ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார் 

மேலும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் ஸ்ரீஜன் 720 -க்கு 710 மார்க்குகள் எடுத்து மாநில அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் எட்டாம் இடத்தை பிடித்துள்ளார். 


Tags: தமிழக செய்திகள்

Share this