Breaking News

காங்கிரஸில் இருந்து விலகுகின்றேன் சோனியாவுக்கு குஷ்பு கடிதம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தின் பிரபல திரைப்பட நடிகை குஷ்பு, தி.மு.கவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். காங்கிரஸில் இணைந்த அவருக்கு அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குஷ்பு அறிவித்திருக்கிறார்.

மேலும் சிலநாட்களாக குஷ்பு பா.ஜ.கவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியவண்னம் இருந்தது ஆனால் நடிகை குஷ்பு இதனை மறுத்து வந்தார்

இந்நிலையில் நேற்று டெல்லி சென்றுள்ள அவர் இன்று ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து குஷ்பு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: தமிழக செய்திகள்

Share this